முகப்பருக்களை போக்க சில வழிகள்.!

Default Image
முகத்தில்  பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக  வெயிலில் சுற்றுவது உடல் சூடு, வம்சாவளி மாற்றம்  போன்றவை குறிப்பிடத்தக்கவை.
1.ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில்     தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள்     மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, உடல் சூடு குறைந்து பருக்களும்       மறைந்துவிடும்.
2.தினமும் சீழ் நிறைந்த பருக்களின் மீது சிறிது தேனைத் தடவி மசாஜ் செய்து, 1             மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால்  சருமத்துளைகளில்     உள்ள அடைப்புக்கள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகும்.
3.கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ்                 செய்து,   மறுநாள் காலையில் கழுவ வேண்டும் அல்லது காலை குளிப்பதைக்கு           1மணி நேரத்திற்கு முன் கற்றாழை ஜெல்லை தடவி குளிக்க வேண்டும். இப்படி ஒரு     மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகம் பருக்களின்றி பிரகாசமாக                             இருப்பதைக் காணலாம்.
4.உருளைக்கிழங்கை வட்ட துண்டுகளாக்கி, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின்        அதை எடுத்து முகத்தை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்துக் கழுவ  வேண்டும்.        இல்லாவிட்டால், உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்      கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பருக்கள் நீங்கி,  முகம் அழகாக     இருக்கும்.
5.வெள்ளரிக்காய் எடுத்து அதை மைய் அரைத்து காலை குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகம் பருக்களின்றி உடல் சூடு குறைந்து பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.
6.வெந்தயக் கீரையை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் தயிரை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Some ways to get rid of acne.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்