குழந்தைகளை உறங்க வைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்
பெற்றோர்களாகிய நமக்கு உலகமாக இருப்பது நம்முடைய குழந்தைகள் தான். அவர்களின் முன்னேறத்திற்காகவும் அவர்களை ஞானமிக்க குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் பெற்றோர்களாகிய நாம் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு எது சரியாக இருக்கும் என்பதனை நாம் பார்த்து பார்த்து அவர்களுக்காக செய்து வருகிறோம்.மேலும் அவர்கள் எந்தவிதமான தவறான பாதைகளும் சென்று விட கூடாது எனவும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். இன்றைய குழந்தைகளால் பெற்றோர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை குழந்தைகள் உறங்க போவதற்கு தாமதமாகிறது என்பது தான். குழந்தைகள் உறங்க வைப்பதற்கு என்ன செய்வது என்று தெரியலையே என பல பெற்றோர்கள் குழப்பம் அடைவதும் உண்டு.
எந்தெந்த காரியங்களால் குழந்தைகளின் உறக்கம் தடைப்படுகிறது என்பதனையும் நாம் குழந்தைகளின் உறக்கத்தில் எவ்வாறு அக்கறை செலுத்தலாம் என்பதனையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
குழந்தைகள் உறங்க செய்யவதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
குழந்தைகளுக்கு உறக்கம் செய்வதற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்றினால் போதும் அவர்கள் நமது வழிக்கு வந்து விடுவார்கள்.
உணவு :
குழந்தைகளுக்கு நாம் இரவு நேரங்களில் கொடுக்க கூடிய உணவுகள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும்.
அவ்வாறு செரிமானம் ஆகாத கடினமான உணவுகளை நாம் கொடுப்பதால் அவர்களுக்கு தூக்கம் வருவதில் பல சிக்கல் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு உணவுகளை கட்டாய படுத்தி திணிக்க கூடாது.இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்படலாம்.குழந்தைகள் இரவுநேரங்களில் சாப்பிடாமலும் தூங்க செய்வதற்கு அனுமதிக்க கூடாது.
இரவு நேரங்களில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுங்கள்.இன்றைக்கு என்ன சாப்பாடு என்று நம்மிடம் கேட்ட உடனே புடிக்காத சாப்பாடாக இருந்தால் உடனே வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். எனவே குழந்தைகள் என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டு செய்து கொடுங்கள்.
சுற்றுசூழல் :
குழந்தைகளின் உறக்கம் தடைபடுவதற்கு பல காரணங்கள் உண்டு.குழந்தைகளுக்கு சுற்றுசூழல் மாறுபாட்டினாலும் உறக்கம் வராமல் இருக்கலாம்.
அமைதியான சூழல்கள் இல்லாமையும் குழந்தைகளின் உறக்கம் தடைபடுவதற்கு முக்கியகாரணியாக அமைந்து விடுகிறது.
குழந்தைகள் உறங்கும் போது அமைதியான சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பதும் பெற்றோர்களாகிய நமது கடமை. இந்த விஷயத்தில் நாம் சிறிது அக்கறை செலுத்தவேண்டும்.
குழந்தைகள் உறங்கும் இடம் பாதுகாப்பானது எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது என அவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும். இதனாலும் கூட சில குழந்தைகள் பயந்து உறங்காமல் இருக்கலாம்.
இசை மூலம் :
குழந்தைகள் தூங்கவில்லை என்றால் நாம் பாடல்கள் பாடி தூங்க வைக்கலாம்.பாடல்கள் பாடத்தெரியாது என்றால் மெலடி பாடல்களை போட்டு மிதமான இசையில் அவர்கள் கேட்குமாறு வைத்தால் அவர்களுக்கு தூக்கம் தன்னால் வந்து விடும்.
கதைகள்:
குழந்தைகள் கதைகளை கேட்டாலும் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு நீதிக்கதைகள் சொல்லி தூங்க வைப்பதும் மிக சிறந்த வழிமுறையாகும்.
பயங்கரமான கதைகளை குழந்தைகளுக்கு கூற கூடாது. அது குழந்தைகளுக்கு பயத்தினை ஏற்படுத்தி அவர்கள் உறக்கத்தை கெடுத்து விடும்.