கடலை மாவு வைத்து முக அழகு பெற சில இயற்கை வழிமுறைகள்…!

Default Image

காலங்காலமாகவே பெண்களின் அழகை அதிகரிப்பதற்கும்,  இழந்த முக பொலிவை திரும்ப பெறுவதற்கும் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருளாக கடலைமாவு இருந்து வருகிறது. இந்த கடலை மாவு முகத்திற்கு மட்டுமல்லாமல் முழு உடலுக்குமே பளபளப்பையும் அழகையும் கொடுக்கக்கூடியது. இன்று எந்தெந்த சருமத்திற்கு எப்படிப்பட்ட முறையில் பேஸ் பேக் செய்து கடலைமாவை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கிரீன் டீ

நன்மைகள் : சருமத்தில் முகப்பருக்கள் அதிகம் உள்ளவர்கள் கடலை மாவுடன், க்ரீன் டீயைக் கலந்து ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள முகப்பருக்கள் மறைந்து, முகம் பொலிவு பெற உதவும்.

உபயோகிக்கும் முறை : ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 ஸ்பூன் கிரீன் டீ ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இவற்றை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, அதன் பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். இதை வாரத்தில் இரண்டு முறை செய்து வரும் பொழுது முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைந்து முக அழகைப் பெறலாம்.

கற்றாழை

நன்மைகள் : வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் கற்றழையை  பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதுவும் கடலை மாவுடன் சேர்த்து கற்றாழையை பயன்படுத்தினால் முகத்தில் வறட்சி தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறும்.

உபயோகிக்கும் முறை : கடலை மாவு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் போல தயாரித்து இதை முகத்தில் தடவி கொள்ளவும்.

இடைப்பட்ட காலம் : 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவி விடவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும் முகத்தின் வறட்சி தன்மை மாறிவிடும்.

ரோஸ் வாட்டர்

நன்மைகள் : சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கடலை மாவுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவும் போது முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பு பெறும்.

உபயோகிக்கும் முறை : ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே விடவும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து விட்டு கழுவி விடவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரை உபயோகிக்கலாம். முகம் பொலிவுடன் காணப்படும்.

சீமைச்சாமந்தி டீ

நன்மைகள் : எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் கடலை மாவுடன் சீமைச்சாமந்தி டீயை சேர்த்து பேஸ்ட் போல செய்து தடவி வரும் போது முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.

உபயோகிக்கும் முறை : கடலைமாவு சிறிதளவு எடுத்துக் கொண்டு இதனுடன் சீமைச்சாமந்தி டீ 3 ஸ்பூன், மஞ்சள் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி விடவும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவி விடவும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

பப்பாளி சாறு

நன்மைகள் : கருமையான சருமம் உள்ளவர்கள் முகப் பொலிவு பெற்று வெண்மை நிறம் அடைய வேண்டுமென்றால் கடலை மாவை எடுத்து அதனுடன் பப்பாளியை கூழ் செய்து முகத்தில் தடவலாம்.

உபயோகிக்கும் முறை : கடலை மாவுடன், பப்பாளி கூழ் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி விடவும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி விடவேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் போதும். முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்