சமையல் செய்வது என்பது மிகக் கடினமான ஒன்றும் கிடையாது, சாதாரணமானதும் கிடையாது. அது ஒரு கலை. சமையல் செய்வது ஆண்கள் பெண்கள் என பலருக்கும் பிடித்த ஒன்று. சிலர் சமையல் செய்வது ஏதோ பெரிய வேலை என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சமையலில் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்தால் நிச்சயம் நீங்கள் சிறந்த சமையல் நிபுணராகவே மாறிவிடலாம்.
நமக்கு சமைக்க தெரியவில்லை என பலர் சமையல் செய்வதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் அப்படி இருக்க கூடாது. எப்படி சமைக்க வேண்டும் என நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் சமையல் தெரியும் என்றால், அதுவும் ஒரு பெருமைதான். நாம் சுவையாக சமைத்து இருக்கிறோம் என்று ஒருவர் சொல்லும் பொழுது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும் என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்.
சிலர் சமைத்து தான் பார்ப்போமே என்று சமைப்பார்கள். இதன் மூலம் தவறுகள் ஏற்பட்டதும் அச்சப்படுவார்கள். ஆனால், சில சமயங்களில் தவறாக செய்யப்பட்ட சமையல் கூட வித்தியாசமான சுவையை கொடுத்து அது ஒரு புது விதமான உணவு வகையாக மாறிவிடுகிறது. சமையல் செய்யும் போது செய்யக்கூடாத சில முக்கியமான குறிப்புகளை இன்று தெரிந்து கொள்வோம். சமையல் விரும்பிகளுக்கு மட்டுமல்லாமல் இனி சமையல் செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கும் உதவும்.
எப்பொழுதுமே நீங்கள் சமையல் செய்யும் பொழுது புதிதாக ஏதேனும் ஒரு உணவை செய்து பார்த்துக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் எதைப் பார்த்து உணவை சமைக்கிறீர்களோ அதே போல நீங்க சமைத்துக் கொண்டே செல்ல வேண்டும். இடையில் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம் என சுவைத்து பார்த்தீர்களானால், நிச்சயம் உங்களுக்கு இதில் இன்னும் கொஞ்சம் ஏதாவது ஒரு பொருளை சேர்க்கலாம் என்று தோணும். எனவே அதன் சுவை மாறிவிடும். நீங்கள் செய்வதற்கு நினைத்த உணவை உங்களால் செய்ய முடியாது. உங்களுக்கு விருப்பமான உணவு தான் அந்த இடத்தில் உருவாகும். எனவே சமைக்கும்போது சுவை செய்து பார்க்கக் கூடாது.
உணவு சமைப்பதற்கு முக்கியமான தேவை நாம் சமைக்கக்கூடிய பாத்திரத்துக்கு தேவையான அளவு சூடுதான். போதுமான அளவு சூடு இல்லாமல் உணவு சமைக்கும் போது, ஒழுங்காக சமைக்க முடியாது. ஏனென்றால், ஒழுங்காக சூடாகாத பாத்திரத்தில் உணவு ஒட்டி கொண்டு விடும். அதே சமயம் அதிகமான அளவு சூடும் இருக்க கூடாது. சமைப்பதற்கு போதுமான அளவு சூடு என்ன என்பதை புரிந்து கொண்டாலே நன்றாக சமைத்து விடலாம்.
மாமிச உணவுகள் சமைக்கும் பொழுது அதிலுள்ள சுவையான சாறுகள் அனைத்தும் இறைச்சியிலிருந்து வெளியேறி விடும். சமைத்த உடனே சாப்பிட்டால் இறைச்சியில் அந்த சுவை இருக்காது. எனவே மாமிச உணவுகள் சமைத்தும் ஒரு 15 நிமிடம் கழித்து தான் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் குழம்பிலும், கரியிலும் சுவை இருக்கும்.
மாமிச உணவுகள் சமைக்கும் பொழுது தான் பலருக்கும் உப்பு சேர்க்கும் பொழுது தவறுகள் ஏற்படுகிறது. சில நேரம் அதிகரித்து விடுகிறது. சில நேரம் உப்பு குறைவாகி விடுகிறது. எனவே கோழி இறைச்சி சமைக்கும் பொழுது இறைச்சியை கழுவும் பொழுதே லேசாக உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பின் குழப்பு கொதித்ததும் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறி சுவை பார்த்தால் அட்டகாசமாக இருக்கும்.
காய்கறிகளை அவிக்கும் பொழுது அதிகமான நேரமும் வேக வைக்க கூடாது, வேகாமலும் எடுத்து விடக்கூடாது. 7 நிமிடம் மட்டும் அவித்து எடுத்தாலே நிச்சயம் காய்கறிகள் நன்கு அவிந்து விடும்.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…