பிகில் படத்தை புறந்தள்ளுகிறதா பெரிய திரையரங்குகள்?! காரணம் என்ன?!

தளபதி விஜய் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என முக்கிய தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. இப்படடம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ஜி.கே சினிமாஸ் பிகில் படத்தை திரையிடவில்லை என கூறியது. அதனை தொடர்ந்து, சென்னை, பாடி சிவசக்தி திரையரங்கும் பிகில் படத்தை வெளியிடவில்லை என அறிவித்துவிட்டது. அதே போல தென் தமிழகத்தில் முக்கிய திரையரங்கான ராம் சினிமாஸ் திரையரங்கும் தற்போது வரை பிகில் திரைப்படம் வெளியிடுவது குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
இதற்க்கு காரணம் தயாரிப்பு தரப்பில் இருந்து அதிக விலை கேட்கிறது.என ஒரு தரப்பும், சிலரோ விநியோகிஸ்தர்கள் சில திரையரங்குகளுக்கு பிகில் படத்தை கொடுக்காமல் இருக்கின்றனர் என ஒரு தரப்பும் கூறிவருகிறது.
இருந்தாலும், பெரிய திரையரங்குகள் பிகில் படத்தை திரையிடாமல் இருப்பது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025