பிரதமரை ’பணியிடைநீக்கம்’ செய்த சோமாலியா அதிபர்!
சோமாலிய பிரதமர் முகமது ஹுசைன் ரோபிளை பணியிடை நீக்கம் செய்து அதிபர் முகமது ஃபர்மாஜோ அதிரடி நடவடிக்கை.
சோமாலிய பிரதமர் முகமது ஹுசைன் ரோபில் மீதான ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதிபர் முகமது ஃபர்மாஜோ அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோபிளின் பதவி நீக்கம், நாட்டின் கடற்படையினரிடமிருந்து அவரது தனிப்பட்ட லாபத்திற்காக நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என்றும் கூடுதலாக, சோமாலிய கடற்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் கப்டிக்ஸாமிட் மக்ஸாமட் டிரிரை இடைநீக்கம் செய்ய அதிபர் ஃபர்மாஜோ உத்தரவிட்டார் எனவும் கூறப்படுகிறது.
சோமாலியாவில் அதிபர் மற்றும் பிரதமர் இடையே பல கருத்து வேறுபாடுகள் காரணமாக பல மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. ஏப்ரலில் ஃபர்மாஜோவின் 4வது பதவிக்காலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்தது மற்றும் செப்டம்பரில் தேர்தலை நடத்த ரோபிலின் ஆணையை இடைநிறுத்தியது உள்ளிட்ட செயல்பட்டால் கருத்து வேறுபாடு இருந்து வந்தது என கூறப்படுகிறது.
Prime Minister Mohamed Hussein Roble accompanied by his deputy and top security officials incl army and police commanders walks into his office amid escalating tension between him and President Farmaajo. pic.twitter.com/o4RY9vRHfs
— Ahmed Abdi Kosar (@AhmedKosar1) December 27, 2021