தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே கோரத் என்ற பகுதியில் சார்ஜெண்ட் மேஜர் ஜக்கரபந்த் தொம்மா என்ற ராணுவ அதிகாரி நேற்று( சனிக்கிழமை) அங்கிருந்த ராணுவக் கவச வாகனத்தைக் கடத்த முயன்றுள்ளர். அப்போது அவரைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஆயுதங்கள் வைத்திருந்த இடத்திற்குச் சென்ற தொம்மா ஏராளமான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அதே வாகனத்தில் டெர்மினல் 21 என்ற வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே முன்னதாக அவர் அங்கிருந்த புத்த விகாரத்திலும் துப்பாக்கியோடு சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், டெர்மினல் 21 வணிக வளாகம் சென்ற அவர், காரை விட்டு இறங்கியதும் கண்மூடித்தனமாக அங்கு உள்ளவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினார்.
இதுகுறித்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் மீதும் தொம்மா துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பொதுமக்களில் ஏராளமானோரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு வணிக வளாகத்தில் பதுங்கிக் கொண்டார் என்றும், பின்னர் வணிக வளாகத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கவும், தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்கவும் ராணுவ அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். ஆனால் அவரை பிடிக்கமுடியவில்லை என்றும் தப்பி ஓடிவிட்டார் என்றும் தவகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மறைந்திருந்த ராணுவ அதிகாரி தொம்மா நடத்திய திடீர் தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அங்கிருந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ராணுவ வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…