ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு.! 25 பேர் உயிரிழப்பு, 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

Default Image
  • தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே டெர்மினல் 21 வணிக வளாகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே கோரத் என்ற பகுதியில்  சார்ஜெண்ட் மேஜர் ஜக்கரபந்த் தொம்மா என்ற ராணுவ அதிகாரி நேற்று( சனிக்கிழமை) அங்கிருந்த ராணுவக் கவச வாகனத்தைக் கடத்த முயன்றுள்ளர். அப்போது அவரைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஆயுதங்கள் வைத்திருந்த இடத்திற்குச் சென்ற தொம்மா ஏராளமான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அதே வாகனத்தில் டெர்மினல் 21 என்ற வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே முன்னதாக அவர் அங்கிருந்த புத்த விகாரத்திலும் துப்பாக்கியோடு சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், டெர்மினல் 21 வணிக வளாகம் சென்ற அவர், காரை விட்டு இறங்கியதும் கண்மூடித்தனமாக அங்கு உள்ளவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினார்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் மீதும் தொம்மா துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பொதுமக்களில் ஏராளமானோரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு வணிக வளாகத்தில் பதுங்கிக் கொண்டார் என்றும், பின்னர் வணிக வளாகத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கவும், தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்கவும் ராணுவ அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். ஆனால் அவரை பிடிக்கமுடியவில்லை என்றும் தப்பி ஓடிவிட்டார் என்றும் தவகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மறைந்திருந்த ராணுவ அதிகாரி தொம்மா நடத்திய திடீர் தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அங்கிருந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ராணுவ வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்