சொகுசுவசதி செய்து கொடுத்தாக எழுந்த புகாரை அடுத்து சென்னை சிறைத்துறை டிஐஜி வீட்டில் ரெயிடு….!!!
சென்னை புழல் சிறைத்துறை டிஐஜி வீட்டில் ரெயிடு என தகவல் வெளியாகியுள்ளது. புழல் சிறை வளாக குடியிருப்பில் உள்ள டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தண்டனை கைதிகளுக்கு சொகுசுவசதி செய்து கொடுத்ததாக அண்மையில் புகார் எழுந்தது. மேலும் சிறையில் கைதிகள் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.