ஊரடங்கால் வேலையிழந்து காய்கறி விற்ற சாப்ட்வேர் என்ஜீனியர்.! உதவிக்கரத்தை நீட்டிய ரியல் ஹீரோ.!

Default Image

ஊரடங்கால் வேலையிழந்து காய்கறி விற்று வந்த சாப்ட்வேர் என்ஜீனியரான பெண்ணிற்கு புது கம்பெனியில் வேலையை வாங்கி கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார்.

நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், சமீபத்தில் கூட மகள்களை வைத்து ஏர் உழும் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சாப்ட்வேர் என்ஜீனியரான ஒரு பெண் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து காய்கறி விற்கும் பணி செய்து வந்ததை கண்ட சோனு சூட், அந்த பெண்ணிற்கு புதிய கம்பெனி ஒன்றில் இன்டர்வியூக்கு ஏற்பாடு செய்ததோடு பணி நியமன உத்தரவையும் பெற்று கொடுத்துள்ளார். தொடர்ந்து உதவி வரும் சோனு சூட்டிற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்