டாக்டர் படத்தில் இடம்பெற்ற SoBaby பாடல் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு நடித்து முடித்துள்ளார். இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மார்ச் 26-ம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இந்த படத்திலிருந்து SoBaby பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த பாடல் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரென்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. சமீப காலமாக அனிருத் இசையமைக்கும் பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…