அடடே இவ்வளவு நன்மைகளா? யோகாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
- யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.
நமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இதுக்கா நமது வாழ்வில் பல நன்மைகளை அளிக்கிறது. யோகாசனம் உடற்பயிற்சியை விட மேலான நன்மைகளை அளிக்கிறது.
மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த பதிவில், யோகாசனம் செய்வதில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
மன அழுத்தம்
நமது அன்றாட வாழ்வில், நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். அனுதினம் நாம் வேலைக்கு செல்கிறோம், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைகள் என அனைவருக்கும் பனி சுமைகள் அதிகமாக காணப்படும்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அனைவருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலைகளில் யோகாசனங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் மனஅமைதியும் கிடைக்கும்.
சுவாச பிரச்சனை
சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு யோகாசனம் என்பது மிக சிறந்த பயிற்சியாகும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சுவாச பிரச்சனைகள் தான்.
மேலும், இது ஒரு சிறந்த சுவாச பயிற்சியாகும். இது இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமைய உதவுகிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.
இதயம்
யோகாசனம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
மேலும், இது சீரான சுவாசம் கிடைப்பதை விட, இரத்த ஓட்டம் சீராகி, இதயம் பல பெறுகிறது.
உடல் அமைப்பு
இன்றைய உலகில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று உடல் அமைப்பு தான். அழகிய உடல் அமைப்பு வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கும்.
உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளை சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து உடல் அமைப்பை அழகாக்கிறது.
இரத்த ஓட்டம்
இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சீராக அமைகிறது. இரத்தம் தான் உடலுக்கு உயிர். யோகாசனம் செய்வதன் மூலம் உடலின் இரத்த ஓட்டம் சீராக அமைகிறது.
ரத்த ஓட்டம் சீரடைவதால் உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுத்து, ரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தொந்தி
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் இன்று தொப்பை பிரச்னை தான். தொப்பை வைப்பதற்கு காரணம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் தேங்கி தொப்பையாக மாறுகிறது.
இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொந்தி பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
உடல் ஆற்றல்
யோகாசனம் செய்யும் போது, உடலில் உள்ள சோம்பேறிதனம் குறைந்து, உற்சாகத்தோடு இருக்க உதவுகிறது. மேலும், இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.
நோய் நொடியின்றி வாழ ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வந்தால், பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
மூளை
யோகாசனம் செய்வதன் மூலம் மூளையின் செயல்திறனை ஆதிக்க செய்யலாம். தினமும் யோகா செய்பவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பலம் பெறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், மூளை தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.