தண்ணீர், உணவு என மனிதனின் அணைத்து அன்றாட தேவைகளுமே தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது நாம் அறிந்தது. ஆனால், பேச்சுவாக்கில் பாருங்கள் காற்றையும் ஒரு நாள் விலை குடுத்து வாங்கணும் என நக்கலாக சொல்லியிருப்போம். அது தற்போது உண்மையிலேயே சாத்தியமாகிவிட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஊரில் தெரியுமா?
வேறெங்கும் இல்லை. நம்ம தலைநகராகிய டெல்லியில் தான். அதாவது, மற்ற இடங்களை விட நம் இந்தியாவின் தலை நகராகிய டெல்லியில் காற்றின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு ஒரு பொருளை பார்ப்பதற்கே காத்திருக்க வேண்டும் போல, அப்படி பட்ட காற்று மாசுபாடு.
இப்படிப்பட்ட காற்று மாசுபாட்டால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் நிலை மோசமடையவும், உடல் நிலை சரியில்லாதவர்கள் இறக்கவும் கூடிய நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் பார் ஒன்றை ஒருவர் அமைத்துள்ளார்.
அங்கு ஒரு நாளுக்கு 15 பேருக்கு மேல் வருவார்களாம். 1 மணி நேரத்திற்கு 299 ருபாய் தற்போது வரை வசூலிக்கப்படுகிறது. போக போக இன்னும் அதிகரிக்கும் என கூறுகிறார் உரிமையாளர். அந்த காற்றிலும் லெமன்கிராஸ், ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூக்லிப்பிட்டஸ், லாவண்டர் ஆகிய 7 நறுமணங்களை கலந்து தேவையானதை கொடுப்பார்களாம். மனிதர்களாகிய நமது செயல் பாட்டால் இறைவன் நமக்கு கொடையாக கொடுத்த காற்றை கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…