நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் எலுமிச்சை பழமும் ஒன்று. இதில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. இதில் ஊட்டச் சத்துகளும் அதிகம் உள்ளது. ஒரு கப் எலுமிச்சைச் சாற்றில் 50 கிராம் விட்டமின் சி உள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம் இரும்புச் சத்துக்களும் உள்ளன.
இது மட்டுமல்லாமல் நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் ஏராளமான நன்மைகள் உண்டு எலுமிச்சைச்சாறை விட தோலில் அதிக நன்மைகள் உள்ளது. தோல் வேகவைத்து நீரை குடித்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை -6
தண்ணீர் அரை லிட்டர்
தேன் தேவையான அளவு
செய்முறை:
முதலில் எலுமிச்சம் பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும் அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க கொதிக்கவைத்து இறக்கவும். பின்னர் அதனுடன் தேன் கலந்து குடிக்கவும்.
நன்மைகள்:
இதை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நோய்எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். மிகவும் ஆற்றலுடன் , சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.
தினமும் இதை குடித்து வந்தால் உடலில் உள்ள மூலைமுடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாக இருக்கும்.
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…