முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? வாருங்கள் அறிவோம்!
சாதாரணமாக உணவில் நாம் காய்கறிகள் அதிகம் பயன்படுத்தினாலும், முள்ளங்கியை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால், இந்த முள்ளங்கியில் வைட்டமின் சி, பி6 வைட்டமின் ஏ, பி, பி2, பி5 ஆகியவை காணப்படுகிறது. இதில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மக்னீசியம், மாங்கனீசு பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. குறைந்த சக்தி கொண்ட இந்த முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் புரதச் சத்து நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
முள்ளங்கி உண்ணும் பொழுது குறைந்த அளவு எரிசக்தி உடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தீர்வு. கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுத்தன்மையுள்ளவற்றை நீக்குகிறது.
ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரித்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் உயர்த்துகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினை கட்டுப்படுத்தும். மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பை சரிசெய்து செல்கள் நன்கு செயல்பட வைக்கிறது.
முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மலத்தையும் இளகி எளிதில் வெளியேற உதவுகிறது. சிறுநீர் எரிச்சலை நீக்கி நன்கு பெருகச் செய்கிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் குறைபாடுகளை நீக்குகிறது.