முலாம்பழத்திலும் இவ்வளவு மருத்துவ குணங்களா?
முலாம் பலத்தை நாம் சுவைக்காக மட்டுமே இத்துணை நாட்கள் எடுத்துக்கொண்டிருப்போம். ஆனால், இதில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியலாம் வாருங்கள்.
முலாம்பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவக்குணங்கள்
வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் “ஏ’, “பி’, “சி’, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
மூல நோய்க்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட வரம் இந்த பழம். இதில் வைட்டமின்கள் “ஏ’, “பி’, “சி’ தாதுப் பொருள்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பித்தத்தை குறைத்து, அஜீரணத்தை அகற்றும். வாய்ப்புண்,தொண்டைப்புண் மற்றும் வயிற்றிலுள்ள புண்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.