மாஸ்டரை ஓடிடியில் இவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் செய்ய இத்தனை கோடியா?

அமேசான் பிரைம் நிறுவனம் மாஸ்டர் படத்தினை ரூ.36 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் இன்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது .
வழக்கமாக திரையரங்குகளில் வெளியான படத்தினை இரண்டு மாதங்களுக்கு பின் தான் ஓடிடியில் வெளியிடுவார்கள்.ஆனால் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய 2 வாரங்களிலேயே வெளியானது .அதற்கு தயாரிப்பாளருக்கு 15.5 கோடி ருபாய் வரை கூடுதலாக வழங்கியதாம் அமேசான் நிறுவனம்.மொத்தமாக மாஸ்டர் படத்தினை வாங்க ரூ.36 கோடி வரை அமேசான் பிரைம் நிறுவனம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025