1.35 கிலோ எடைகொண்ட லேப்டாப்பில் இவ்வளவு அம்சங்களா? வெளியானது மி நோட்புக் 14.. முழுவிபரங்கள் இதோ!
மி நோட்புக் 14 ஆனது, சியோமி ரசிகர்களால் மிக எதிர்பார்க்கப்பட்ட ஒரு லேப்டாப்பாகும். பல மாதங்களாக லேப்டாப்பை வெளியிடவுள்ளோம் என சியோமி நிறுவனம் தெரிவித்து வந்த நிலையில், ஜூன் 11 ஆம் தேதி இதனை வெளியிட்டனர். இந்த லேப்டாப்பை பலரும் வரவேற்றனர்.
மி நோட்புக் 14:
சியோமி மி நோட்புக் 14 மற்றும் மி நோட்புக் 14 ஹொரைசன் எடிஷன் ஆனது ஏ5052 மெக்னீசியம் மற்றும் அலுமினிய அலாய் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது விமானங்களை உருவாக்கும் உலோகமாகும். இதனால் இந்த லேப்டாபின் குவாலிட்டி, சிறந்ததை இருக்கும். மேலும் இந்த லேப்டாப், வெறும் 1.35 கிலோ எடைகொண்டுள்ளது.
டிஸ்பிலே:
இந்த மி நோட்புக் 14 ஆனது, 14 இன்ச் அளவிலான புல் எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1920 x 1080 பிக்சல்கள் அளவிலான ஸ்க்ரீன் ரெசல்யூஷன், 178 டிகிரி கோணம், 91% ஸ்க்ரீன்-பாடி விகிதம் மற்றும் ஆன்டி-க்லேர் (anti-glare) பாதுகாப் அம்சத்தை கொண்டுள்ளது.
ஓஎஸ் மற்றும் ப்ராசஸர்:
இந்த லேப்டாப், சமீபத்தில் வெளியான விண்டோஸ் 10 ஆம் ஜெனரேஷன், இன்டல் கோர் ஐ 5 ப்ராசஸர், என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 250 ஜி.பீ.யு கிராபிக்ஸ், 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை SATA SSD ஸ்டோரேஜ் ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேலும் மி நோட்புக் ஹொரைஸன் எடிஷன் ஆனது, என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 350 கிராஃபிக் கார்டுடன் 10வது ஜெனரேஷன் இன்டெல் கோர் ஐ 7 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இந்த லேப்டாப் 8 ஜிபி டிடிஆர் 4 ரேம் மற்றும் 512 ஜிபி வரை பிசிஐ எக்ஸ்பிரஸ் ஜெனரல் 3 என்விஎம் எஸ்எஸ்டி ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
பேட்டரி:
இந்த மி நோட்புக் 14 லேப்டாப், விண்டோஸ் 10 ஹோம் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த லேப்டாப்களுடன் 65W பாஸ்ட் சார்ஜர் உள்ளது. இது லேப்டாப்பை வெறும் 35 நிமிடங்களுக்குள் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் என சியோமி நிறுவனம் தெரிவித்த நிலையில், இந்த லேப்டாப் 10 மணிநேரம் வரை பேட்டரி லைப் இருக்கும்.
ஆடியோ மற்றும் இணைப்புகள்:
ஆடியோவைப் பொறுத்தவரை, மி நோட்புக் 14-ல் இது டி.டி.எஸ் ஆடியோ ப்ராசெஸிங் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. மேலும், பெரிய டிராக்பேட் சிசர் கீபோர்ட்டையும் கொண்டுள்ளது. இணைப்புகளை பொறுத்தவரை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், இரண்டு யூ.எஸ்.பி 3.1 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி 2.0 போர்ட், ஒரு எச்.டி.எம்.ஐ போர்ட், ஒரு 3.5 மி.மீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜிங் போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
இந்த மி நோட்புக் 14-ல் வெப்காம் கிடையாது. மேலும், இந்த பொதுமுடக்கத்தில் பலரும் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணையத்தில் வீடியோ சாட் செய்து வருவதால், இந்த லேப்டாப்களுடன் மி வெப்காம் எச்டியை இலவசமாக வழங்கியது சியோமி நிறுவனம்.
மாடல் மற்றும் விலை:
இந்த மி நோட்புக் 14 லேப்டாப்பை, சியோமி நிறுவனத்தின் வலைத்தளமான www.mi.com என்ற வலைத்தளத்திலும், அமேசானிலும் விற்கப்பட்டுவருகிறது.
சியோமி மி நோட்புக் 14 1901-எஃப்சி மாடல், ரூ.41,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் 1901-எஃப்ஏ மாடல், ரூ.44,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்றொரு மாடலான 1901-டிஜி,ரூ.47,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், மி நோட்புக் ஹொரைசன் எடிஷன், 1904-ஏஆர் ஆனது, ரூ.54,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்றும் 1904-ஏஎஃப் மாடல், ரூ.59,999 க்கும் விற்கப்படுகிறது.