காலையில் கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கிறது.
கண்பார்வை நன்றாக இருக்கும். உடலில் இருக்கும் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை அறைத்து தடவினால் மிகவும் நல்லது.
மேலும் தோலில் ஏற்படும் பிரச்னை மற்றும் புண்களை கேரட் ஆற்றும் மேலும் கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும் வீக்கம், வலியை கரைக்க கூடியது.கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.
ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
கோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.
கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.
கேரட்டை காலையில் மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நீங்கி பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். கேரட்டை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை பசையாக அரைக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வேண்டும்.
இதை வடிக்கட்டி குடித்துவர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. ஈரல் பலம் அடைகிறது. ரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும். பித்தம், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் குளிர்ச்சி தருகிறது. தோலுக்கு வண்ணத்தை தருகிறது.
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…