அட இவ்வளவு நன்மைகளா? மாலையில் தேநீருக்கு பதிலாக இதை குடிங்க!
- இந்த தேநீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள்.
- சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
இன்று நாம் நாகரீகம் என்கின்ற பேரில் உணவானாலும், பானங்களானாலும் வகை வகையாக வித்தியாசமான முறையில் உண்பதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் தேநீருக்கு அடிமையாகி உள்ளனர். தேநீர் அதிகமாக குடிப்பதால் நமது உடல் நலத்திற்கு பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. எனவே நாம் தேநீருக்கு பதிலாக, எந்த பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பாப்போம்.
தேவையானவை
- தண்ணீர் – 2 டம்ளர்
- துளசி – 1 கைப்பிடி
- தூதுவளை – 1 கைப்பிடி
- இஞ்சி – சிறிய துண்டு
- கருப்பட்டி தூள் – 1 ஸ்பூன் ஸ்பூன்
- தேயிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் துளசி, தூதுவளை மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதனுடன் துளசி, இஞ்சி, தூதுவளை மற்றும் தேயிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் கொதித்தவுடன் இறக்கி கருப்பட்டி துளை சேர்த்து நன்றாக கலக்கிய பின், தேநீரை வடிகட்டி அனைவருக்கும் பரிமாற வேண்டும். இந்த தேநீரை வாரத்திற்கு இருமுறை அருந்தி வந்தால் சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.