அடடே அப்பவே இந்த செல்பி வந்துட்டா? செல்பி உருவான கதை
- இன்றைய இளம் தலைமுறையினரை பைத்தியமாக்கிய செல்பி உருவான கதை.
இன்று இளம் தலைமுறையினர் அனைவர் கைகளிலும், ஸ்மார்ட்போன் தள்ளுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாத இளைஞர்களை பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஸ்மார்போனுக்கு அடிமையாகியுள்ளனர்.
செல்பி அடிமைகள்
ஸ்மார்ட்போனிலேயே பல வகையான அமைப்புகள் உள்ளது. அதில் அனைவரையும் கவர்ந்த ஒன்று தான் இந்த செல்பி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த செல்பிக்கு அடிமையாகி உள்ளனர். இந்த செல்பியால் பறிபோன உயிர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்த செல்பி அப்பவே வந்துட்டா?
சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகில் முதல் செல்பி எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் கர்னாலியஸ் என்பவர் 1839-ஆம் ஆண்டு கேமராவை செட் செய்துவைத்துவிட்டு, பிரேமுக்குள் வந்துவிட்டார். கேமராவின் கிளிக்கிற்காக கேமராவின் முன்னாள் அசையாமல் 5 நிமிடங்கள் வரை பொறுமையாக காத்திருந்துள்ளார்.
இவர் எடுத்த இந்த போட்டோ பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்பி என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
செல்பி என்ற வார்தை அறிமுகம்
நாம் இன்று அடிமையாகி உள்ள இந்த செல்பி என்னும் வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார் என்றால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஹாப் என்பவர் தான்.
நாதன் ஹாப் 2002-ஆம் ஆண்டு ஒரு சின்ன விபத்தில் அவருக்கு உதடுகளில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், கட்டிலில் படுத்திருந்த அவர் உதட்டை படப்பிடித்தார். படப்பிடித்த அவரது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பகிர்வில், போக்கஸ் (focus) சரியாக இல்லை. மன்னிச்சிக்கோங்க, இது ஒரு செல்பி, அதன் காரணம் என்று எழுதி போஸ்ட் செய்துள்ளார். அதனால் இந்த வார்த்தை பிரபலமாகியுள்ளது. ஆனால் இந்த வார்த்தை இந்த அளவுக்கு பிரபலமாகும் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார்.
செல்பிக்கு தமிழ் வார்த்தை
நாம் ஸ்மார்ட்போன் மூலம் அடிமையாகியுள்ள இந்த செல்பிக்கு தமிழ் வார்த்தையிலும் அர்த்தம் உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அகராதி செல்பி என்ற வார்த்தையை டிக்ஷனரியில் இணைத்துள்ளது. செல்பி எனற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் தாமி என்று அர்த்தமாம்.
இந்த செல்பி மோகம் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. தாங்கள் செய்யும். வித்தைகளை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, சிலர் உயரமான பிற்காலத்திலும், ஓடும் ரயிலிலும், மலையின் உச்சியிலும், சிங்கம் கரடி, புலி போன்ற விலங்குகளுடனும் சேர்ந்து செல்பி எடுக்கின்றனர்.
இவ்வாறு தங்களது உயிரை பணயம் வைத்து செய்யும் இதுபோன்ற செயல்களால் ஆக்கபூர்வமான நன்மை ஏதும் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
உயிரை காவு வாங்கும் செல்பி
40 சதவீதத்திற்கும் மேலான இளைஞர்கள், வாரந்தோறும் தவறாமல் செல்பி எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அடிக்கடி செல்பி எடுத்தால், நமது முகத்தில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. செல்போனில் இருந்து வெளிவரும் நீலநிற ஒளி தோலின் நலனை பாதிக்கும். அதே நேரத்தில் செல்லில் இருந்து வெளியாகும், எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள் மரபணுவை பாதிக்கச் செய்து தொழில் சுருக்கத்தை ஏற்படுத்தி, முக அழகை கெடுக்கிறது.
இளம் தலைமுறையினரை பைத்தியமாக்கிய செல்பி
இன்று இந்த செல்பி மோகம், இளைஞர்களை விட, இளம் பெண்களையே அதிகமாக பாதித்துள்ளது. இது பலரை பைத்தியமாக மாற்றியுள்ளது. நமது உயிரை கொள்ளையாடும் இந்த செல்பி மோகம் நமது வாழ்வுக்கு அவசியம் தேவையா? சிந்தித்து செயல்படுவோம்.