இதுவரை உலகில் குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாது, உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று பரவ தொடங்கி பத்து மாதங்கள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த வைரஸின் வீரியம் குறைந்த பாடில்லை.
இந்த பாதிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.43 கோடியை கடந்துள்ளது.
இந்நிலையில், உலகில் தற்போது குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது, 2019-ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகானின் தொற்று பரவத் துவங்கி இரண்டு மாதங்களிலேயே, முதலாவது மரபணு மாற்றம் ஏற்பட்டதாகவும், கடந்த ஜூன் மாதம் இந்த மரபணு மாற்ற வைரஸ் வீரியம் மிக்கதாக மாறி, பெரும்பாலான தொற்றுகளுக்கு காரணமாக அமைந்தது.
மேலும், மூன்றாவதாக மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பருக்கும் இடையே தோன்றி இருக்க வாய்ப்புள்ளது என்றும், இறுதியாக கடந்த மாதம் பிரிட்டனில் மரபணுமாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கு முந்தைய வடிவத்திற்கு, மரபுசார் தொடர்பு இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…