அழகோ அழகு.! நீர்மூழ்கி வீரரிடம் அன்பை வெளிப்படுத்திய கடல் நாய்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

- இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடிக்கும்.
- பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயல்என சொல்லலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் பார்த்திராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் காணப்படும்.
இந்நிலையில், அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிய வேண்டும். பின்னர் கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது வழக்கமானது ஆகும்.
அவ்வப்போது, பிரிட்டனின் நார்தம்பெர்லாண்ட் பகுதியை சேர்ந்த நீர்மூழ்கி வீரரான பென் பர்வில்லி என்பவர் அப்பகுதியில் உள்ள ஃபார்னி தீவில் ஆழ்கடல் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வீரரின் அருகில் வந்த சீல் எனப்படும் கடல் நாய் ஒன்று அவரது கையை பிடித்தது. அதன் பின்னர் கடல் நாய் வீரரை தடவிக் கொடுக்க பதிலுக்கு வீரரும் அதன் உடலை தடவிக் கொடுத்தார். இறுதியாக வீரரை கட்டித் தழுவிய கடல் நாய் தனது அன்பை வெளிப்படுத்தியது.
பின்னர் அவருடன் சென்ற மற்றொரு நீர்மூழ்கி வீரர், இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025