1500 விமானங்கள் சேவை பாதிப்பு !அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்….
1500 விமானங்களின் அமெரிக்காவில் கடுமையாக வீசிவரும் பனிப்புயல் காரணமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் சாலையில் ஒரு அடி உயரத்திற்கு பனிகள் உறைந்து போய் உள்ளதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் நியூயார்க், நியூ இங்கிலாந்து, விஸ்கான்சின், வடக்கு இல்லினாய்ஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களும் மோசமான பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. சாலையெங்கும் நிறைந்திருக்கும் பனியில் குழந்தைகள் சறுக்கி விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர்.
சிகாகோவின் சாலைகளில் பனியில் வழுக்கி ஏராளமான வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. சிகாகோ விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பனிக்கட்டிகள் தேங்கி நிற்பதால் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.