ஸ்மார்ட் போன் விற்பனையில் என்றும் ராஜாவாக ஆப்பிள் நிறுவனம்.. உலக அளவில் அதிகம் விற்பனையாகி சாதனை..
- உலகளவில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் வகைகளில் இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் மாறியுள்ளது.
- இதே போல் ஓப்போ, சியோமி நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம்.
இந்த 2019 மூன்றாம் காலாண்டில் 3 % பங்கை ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் 2018 நான்காம் காலாண்டுலிருந்து ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட் போன் விற்பனையில் தனி முத்திரையை பதித்து வருகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ஆய்வில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் மட்டும் மொத்த ஆப்பிள் நிறுவன பொருட்களின் விற்பனையில் 25% மேலாக வருவாயை ஈட்டியுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலுமே ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில், ஆப்பிள் ஐபோன் 11 மாடலும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓப்போ நிறுவனத்தின் எ9, எ5எஸ் மற்றும் எ5 ஆகிய மூன்று மாடல்களும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோல் சியோமியை பொறுத்தவரை, ரெட்மி 7ஏ மாடல் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. சியோமியின் மொத்த விற்பனையில் ரெட்மி 7எ, 50% வருவாயை எட்டியுள்ளது. எனினும் சியோமி நிறுவனத்தின் முதல் 10 மாடல்களின் மொத்த வருவாய் முந்தைய காலாண்டை விட 30 % குறைந்துள்ளதாக கவுண்டர்பாயிண்ட் ஆய்வு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புதிதாக எத்தனை மாடல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சந்தையில் வந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இடம் மாறாமல் அப்படியே தொடர்கிறது.