தூங்கனும் தூங்கனும் இரண்டே நிமிடத்தில் தூங்கியே ஆகணும்! அது எப்படி?!
தூங்குவது சிலருக்கு மிகவும் எளிய செயல். ஆனால் பலருக்கு தற்போது அது மிகவும் கடினமான செயல். அதிலும் ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு தூங்கும் நேரமானது இரவு 12 அல்லது 1 மணியை தாண்டிவிடும். காலை எழுந்திருப்பது 8 மணியை தாண்டும். இதனால் அந்நாள் முழுவதும் உடல் சோர்ந்து காணப்படும்.
இதனை கட்டுப்படுத்த எளிதில் படுத்தவுடன் தூங்க சில வழிமுறைகள் உள்ளன.
முதல் படி : முகத்தை நேரே வைத்து முகத்தை சுறுக்க்காமல் கண் மூடாமல் கழுத்து பகுதியை ரிலாக்ஸ் செய்யவேண்டும்.
இரண்டாம் படி : கைகளை தலைக்கு மேல் வைக்காமல் கீழே நேராக வைக்க வேண்டும். கொஞ்சம் மன அழுத்தம் இருந்தால், கைகளை மேலே உயர்த்தி, கீழிறக்கி பயிற்சி செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் போது மன அழுத்தம் குறையும்.
மூன்றாம் படி ; நன்றாக மூச்சு விட வேண்டும். போர்வையை முகத்தில் மூட கூடாது. நுரையீரலுக்கு சுத்தமான காற்று போய் வருவதை உறுதி செய்யவேண்டும்.
நான்காம் படி : கால்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். கால்களை நேராக வைத்து அழுத்தம் கொடுக்காமல் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
ஐந்தாம் படி : இது மிகவும் முக்கியமானது. இதுவரை உடலுக்கு அமைதி கொடுத்தாயிற்று. இனி மனதிற்கு அமைதி கொடுக்க வேண்டும். நாம் எங்கு படுத்தால் அமைதியாக தூங்குவோமோ அதனை நினைத்து கொள்ள வேண்டும். நிலவின் ஒளி, நதிக்கரை, தாயின் மடி, படகு, என நம் நினைத்த இடத்தில் தூங்குவது போல நினைத்து கொள்ள வேண்டும். நம் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். தூங்க வேண்டும். ஆதலால் எதனையும் நினைக்க கூடாது என நம் மனதிற்குள் கூறிக்கொள்ள வேண்டும்.
இந்த படிநிலைகள் கண்டிப்பாக பலன்தரும். இது படுக்கையில் மட்டுமல்ல, பஸ் பயணம், ரயில் பயணம் என எங்கும் இதை பயன்படுத்தி தூங்கலாம். இந்த முறை அமெரிக்காவில் உள்ள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் பள்ளியில் இந்த முறை ஆய்வுக்கு உட்படுத்தபட்டு 95 சதவீதத்திற்கு மேல் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.