சிவகார்த்திகேயன் படம் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகமாக உள்ளதா சோனி பிக்சர்ஸ்?!

சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக தனது 18வது படத்துக்காக கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களிடம் ஒரு கதை கேட்டு அந்த கதையையும் ஓகே செய்து வைத்துள்ளாராம். இந்த படத்துக்கான வேலை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முதலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இந்த படத்தை தற்போது சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழில் முதன் முதலாக தயாரிக்க உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியங்க அருள் மோகன் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் தெலுங்கில் நானி ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற கேங்லீடர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது தமிழுக்கு அறிமுகமாக உள்ளார் என கூறப்படுகிறது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025