சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் சோனி நிறுவனம்!

நயன்தாரா நடித்து இருந்த கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தை முதலில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்தது. ஆனால், சில நிதி பிரச்சினை காரணமாக அவர்கள் படத்திலிருந்து விலக, தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமே இப்படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, கூடுதல் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் முதன் முதலாக தமிழ் திரைப்படத்தை சோனி பட நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ என வரிசையாக படங்கள் வேகமாக தயாராகி வருகின்றன.