கிரிக்கெட் விளையாடும் SK.! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!

சிவகார்த்திகேயன்,சூரி உட்பட பலர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.அதனை தொடர்ந்து டான் படத்தில் முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகிய மூன்று காமெடி நடிகர்களும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர் .
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது .இந்த நிலையில் டான் படத்திலிருந்து வீடியோ ஒன்று கசிந்துள்ளது.அதில் சிவகார்த்திகேயன்,சூரி உள்ளிட்ட ஒரு சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Six ney!???? @Siva_Kartikeyan vs @sooriofficial anna❤️#DON shooting spot ✨@SkfcChennimalai @AllIndiaSKFC @AnandSkfc @SKFCKeralaOffl @skfc @SalemSKFC @SK_Siddiq_ @MalaysiaSKFC_ @KAonlineSKfans @RRSundarSKFC @Trendswoodcom @kollywood_24x7 @sk_anna_forever @Revathisk1 @SKFansTrichy pic.twitter.com/BglJjzY0i2
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 21, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025