‘தந்தை மகற்கு ஆற்றும் உதவி’ குரளோடு ட்விட்டரில் குரல்!

Published by
kavitha

இன்று தந்தையர் தினம்  உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.கேட்டத்தை எல்லாம் கொடுப்பது கடவுள் என்பார்கள் அந்த கடவுளே நம் தந்தையார்கள்; இல்லை என்று கடவுள் கூட மறுத்து விட வாய்ப்பு இருக்கும் ஆனால் ஒரு போதும் மறுக்கவும் நம்மை மறக்கவும் மண்ணில் இருக்கும் வரை நமக்காக நம் தேவைக்களுக்காக அவர் தேவைகளை புறக்கணத்த புண்ணிய சீலர் நம் தந்தை; தந்தை என்ற வடிவிலான தெய்வம் அல்லவா! அவரை நினைந்து உருக ஒரு நாள் போதுமா? அல்லது வாழ்நாள் தான் பத்துமா?? மனமே என் மன்னவனை போற்று; அவர்கள் தன் மக்களுக்காகவே வாழ்ந்த உத்தமர்கள் ; மாமனிதர்களின் திருபாதத்தில் மனமார வாழ்த்துக்களை சமர்பித்து; தினச்சுவடை உருவாக காரணமாக இருந்த,மற்றும் கரம் கொடுத்து வரும் அத்துனை நெஞ்சங்களுக்கும் உளம்கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்;

இனி  ட்விட்டர் செய்தி:

உலகம் முழுவது கொண்டாடப்பட்டு வரும் தந்தையர் தினத்தை முன்னிட்டு துணைமுதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளதாவது:

“தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்கின்ற வள்ளுவரின் வாய்மொழியாக நின்று தனது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் நல்கி தான் பெற்ற மக்களின் நலம் பேண தினம் உழைக்கும் தந்தைமார்கள் அனைவருக்கும் இந்த இனிய தந்தையர் தின நாளில் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் “உண்ணாமல், உறங்காமல், ஓய்வறியா உழைப்பினை நாளும் நல்கி தன் மக்களது வாழ்வின் இன்பமே எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய அன்புத் தந்தைமார்கள் அனைவருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி மகிழ்கிறேன்” என்றும் தனது வாழ்த்துச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago