‘தந்தை மகற்கு ஆற்றும் உதவி’ குரளோடு ட்விட்டரில் குரல்!
இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.கேட்டத்தை எல்லாம் கொடுப்பது கடவுள் என்பார்கள் அந்த கடவுளே நம் தந்தையார்கள்; இல்லை என்று கடவுள் கூட மறுத்து விட வாய்ப்பு இருக்கும் ஆனால் ஒரு போதும் மறுக்கவும் நம்மை மறக்கவும் மண்ணில் இருக்கும் வரை நமக்காக நம் தேவைக்களுக்காக அவர் தேவைகளை புறக்கணத்த புண்ணிய சீலர் நம் தந்தை; தந்தை என்ற வடிவிலான தெய்வம் அல்லவா! அவரை நினைந்து உருக ஒரு நாள் போதுமா? அல்லது வாழ்நாள் தான் பத்துமா?? மனமே என் மன்னவனை போற்று; அவர்கள் தன் மக்களுக்காகவே வாழ்ந்த உத்தமர்கள் ; மாமனிதர்களின் திருபாதத்தில் மனமார வாழ்த்துக்களை சமர்பித்து; தினச்சுவடை உருவாக காரணமாக இருந்த,மற்றும் கரம் கொடுத்து வரும் அத்துனை நெஞ்சங்களுக்கும் உளம்கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்;
இனி ட்விட்டர் செய்தி:
உலகம் முழுவது கொண்டாடப்பட்டு வரும் தந்தையர் தினத்தை முன்னிட்டு துணைமுதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளதாவது:
“தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்கின்ற வள்ளுவரின் வாய்மொழியாக நின்று தனது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் நல்கி தான் பெற்ற மக்களின் நலம் பேண தினம் உழைக்கும் தந்தைமார்கள் அனைவருக்கும் இந்த இனிய தந்தையர் தின நாளில் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் “உண்ணாமல், உறங்காமல், ஓய்வறியா உழைப்பினை நாளும் நல்கி தன் மக்களது வாழ்வின் இன்பமே எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய அன்புத் தந்தைமார்கள் அனைவருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி மகிழ்கிறேன்” என்றும் தனது வாழ்த்துச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்" எனும் வள்ளுவர் வாய்மொழி நின்று தனது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் நல்கி தான் பெற்ற மக்களின் நலம் பேண தினம் உழைக்கும் தந்தைமார்கள் அனைவருக்கும் இந்த இனிய தந்தையர் தின நாளில் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 20, 2020