இந்தியில் ரீமேக்காகும் துருவங்கள் பதினாறு..!!

துருவங்கள் பதினாறு திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துருவங்கள் பதினாறு. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இந்தி ரீ மேக்கில் ரகுமான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் இளம் ஹீரோ வருண் தவான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்திற்கு ‘சாங்கி’ என பெயர் வைத்துள்ளனர். சஜித் நதியாட்வாலா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.