ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 6 செயலிகளை கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.
இதனையடுத்து டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்த நிலையில், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தம் 224 சீன செயலிகளை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து, பயனர்களின் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தலங்களின் லாகின் விவரங்களை ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக கூகுள் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த 6 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.
தடை செய்யப்பட்ட செயலிகள்:
*Convenient Scanner 2 (100,000 installs)
*Separate Doc Scanner (50,000 installs)
*Safety AppLock (10,000 installs)
*Push Message-Texting & SMS (10,000 installs)
*Emoji Wallpaper (10,000 installs)
*Fingertip GameBox (1,000 installs)
அந்த செயலிகளில் உள்நுழைய நமது பேஸ்புக், ட்விட்டர் மூலமாக லாகின் செய்யவேண்டும். அதன்மூலம் ஜோக்கர் ஹக்கர்கள், அந்த பாஸ்வர்ட் விபரங்களை வைத்து நமது மொபைலை அக்சஸ் செய்து, தகவல்களை திருடுவதாக கூறப்படுகிறது.
இந்த செயலிகள் இருந்தால் உடனே உங்கள் மொபைலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…