அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கனக்டிகட் மாகாணத்தில் உள்ள ஹார்ட்போட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, அந்தக் குழந்தையை அசைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தது. உடற்கூறாய்வு சோதனையில் அக்குழந்தைக்கு கொரோனோ தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, கனெக்டிகட் மாகாண ஆளுநர், “ கனெக்டிகட் மாகாணத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குறைந்த வயது கொண்டதாக இந்த குழந்தைதான் இருக்கக் கூடும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை நமக்கு இந்தக் குழந்தையின் உயிரிழப்பு நினைவூட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…