டான் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சிவாங்கி.!

டான் படத்தின் டப்பிங் பணிகளை சிவாங்கி தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ளித்திரையில் அறிமுகமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தை இந்த வருடம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவாங்கி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி மூலம் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025