புகழ் குறித்த கேள்விக்கு இன்ஸ்டாகிராம் நேரலையில் சிவாங்கி பதிலளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” ரசிகர்களிடன் பலத்த ஆதரவையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றோன்று, இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைய காரணம் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது.
புகழ் – சிவாங்கி அண்ணன் தங்கை போல் இணைந்து செய்யும் லூட்டிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பல பெரிய நடிகர்களின் திரைப்படைகளில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக அஜித் நடித்து வரும் வலிமை, விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படம், சந்தானத்துடன் ஒரு திரைபடம், சிம்புவின் மாநாடு, அஸ்வின் உடன் ஒரு திரைப்படம், மேலும் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த சிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் புகழ் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிவாங்கி ” புகழ் அண்ணாவை நான் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் மிகவும் ரசிப்பேன். அவரின் கடினஉழைப்பும், அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…