சூர்யா, கார்த்தி அவர்களது தந்தை சிவக்குமார் ஆகியோர் இனைந்து 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர்.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ₹1 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
கொரோனா நிவாரண நிதியை வழங்கிவிட்டு செய்தியர்களுக்கு பேட்டியளித்த சிவகுமார் பேசியது ” மக்களை கொரோனா வைரஸில் இருந்து கண்டிப்பாக காப்பாற்றியாக வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவியாக ரூ.1 கோடி வழங்கியுள்ளோம் எல்லா மீடியாக்கள் ஆரோக்கியமாக இருங்கள் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக் கொள்ளுங்கள். தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். அவரது அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…