சிவகார்த்திகேயனின் “சிங்கப்பாதை”.!? வெளியான லேட்டஸ்ட் தகவல்.!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள சிங்கப்பாதை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.
நடிகர் சிவகார்திகேயன் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் “டான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 திரையரங்குகளில் வெளியாகிறது. அதைபோல் அயலான் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கான தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது. அந்த வகையில், அட்லியின் முன்னாள் உதவி இயக்குனர் அசோக் என்பவர் இயக்கத்தில் அப்பா மகன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு சிங்கப்பாதை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் பரவியது.
இப்படத்தையும் கேஜெஆர்ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சென்னை எக்ஸ்பிரஸ், ஜுங்கா, பூமி ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டட்லி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.