சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ரிலீஸ் அப்டேட் மற்றும் சென்சார் சான்றிதழ் !
நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இவர் “மிஸ்டர் .லோக்கல்” படத்தை அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ” நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே போஸ்டர்கள் ,பாடல்கள் என அனைத்தும் மிகுந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் உள்ள பாடல்களுக்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படம் வரும் 27 ந் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு கிளீன் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.