சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ்..?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்திலிருந்து அண்மையில் வெளிவந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து படக்குழு எந்த ஒரு ஆதிகார்வப்பூர்வ அறிவிப்புகள் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.