ஸ்பெஷல் தினத்தில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’.! இந்தாண்டு எஸ்கே ரொம்ப பிஸி.!
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டான் படத்தினை செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ள இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சிவகார்த்திகேயனின் டான் படத்தினை செப்டம்பர் மாதத்தில் அதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தாண்டு சிவகார்த்திகேயனின் மூன்று படங்கள் ரீலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.