சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட்.!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் முடித்துள்ளதாகவும் ,கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளார்.ரவிகுமார் இயக்கும் அயலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்,ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர் .காரினுள் நால்வரும் இருக்கும் புகைப்படத்தினை அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டி.முத்துராஜ் இசையமைக்கிறார் . விரைவில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#AyalaanUpdate ????
Last & final schedule of shoot begins for #Ayalaan with @Siva_Kartikeyan @Rakulpreet @iYogiBabu & #Karunakaran ????????@Ravikumar_Dir @arrahman #NiravShah @ishakonnects @SharadK7 @muthurajthangvl @anbariv @AntonyLRuben @sonymusicsouth @DoneChannel1 @gobeatroute pic.twitter.com/1oV2ya9ulC— KJR Studios (@kjr_studios) November 26, 2020