சிவகார்த்திகேயனுடன் மோத முதன் முதலாக தமிழில் களமிறங்கும் சல்மான் கான்!
பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தபாங், மற்றும் தபாங் 2. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகமான தபாங் 3 விறுவிறுப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார்.
இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழ் டப்பிங், மற்றும் ஹிந்தி பாதிப்பை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை கே.ஜே.ஆர் பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதே கே.ஜே.ஆர்.நிறுவனம் தான் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படமும் டிசம்பர் 20இல் வெளியாவது குறிப்பிடதக்கது.