நேற்று கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர் ஒருவர் நீங்கள் அரசியலிற்கு வருவீங்களா என்ற கேள்வி கேட்டார்.அதற்கு சிரித்துக் கொண்டே சிவகார்த்திகேயன் நான் அரசியலிற்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து 3,மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, என படிப்படியாக வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான். இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அயலான் படம் கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இயங்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் கலைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்ததற்காக கலைமாமணி விருதை தமிழக முதல்வர் பழனிசாமியிடம் இருந்து வாங்கினார். அப்பொழுது செய்தியர்களுக்கு பேட்டியளித்த வரும்போது ஒரு செய்தியாளர் நீங்கள் அரசியலிற்கு வருவீங்களா என்ற கேள்வி கேட்டார் அதற்கு சிரித்துக்கொண்டே சிவகார்த்திகேயன் நான் அரசியலிற்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…