படங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிபடங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசைமாவில் முன்னை நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதில் டாக்டர் படம் வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையரங்குகளில் நான் படம் பார்த்து வளர்ந்தவன் எப்போதும் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
நான் நடித்த டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த காலச் சூழலில் எனது தனிப்பட்ட சிந்தனையை மட்டும் இதில் திணிக்க முடியாது. ஓடிடி தளங்களை பொறுத்தவரை அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன்.
நடிகர்கள் சேர்ந்து இவ்விவகாரத்தில் யாருக்கு எதிராகவும், சாதகமாகவும் முடிவு எடுக்க முடியாது. படங்கள் ஏதோ ஒரு வகையில் வெளியாக வேண்டும். திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது திரையரங்குகளில் பொதுமக்கள் திரைப்படத்தை காண்பற்கான வசதிகள் மேம்பட்டுள்ளன ” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…