சங்கத்துக்கு வேற செயலாளரை தேடும் சிவகார்த்திகேயன்.! நம்ம சூரிக்கு வந்த வித்யாசமான வாழ்த்து.!

Default Image

நடிகர் சூரிக்கு சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கலக்கி வருபவர் சூரி. கடந்த 2009- ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் ரசிகர்களுக்கு மத்தியில், பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

இந்த நிலையில், இன்று நடிகர் சூரி தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில், எதிர் நீச்சல் அடி வென்று ஏற்றுக்கொடி ஆள் செமயா இருக்கீங்க.. இனிமேல் ஹீரோ தான்.. நாங்க சங்கத்துக்கு வேற செயலாளரை தான் பாக்கணும் போல… அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் இருவரின் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. திரையுலகை தாண்டி இருவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறார்கள். தற்போது இருவரும் இணைந்து டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP