இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு ஆக்ஷன் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலானது. ஆனால் இயக்குனர் பொன்ராம் சூர்யாவின் படத்தை இயக்குவதால் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு .
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படம் சம்மந்தப்பட்டதால் சந்தித்தாரா அல்லது தனிபட்ட முறையிலான சந்திப்பா என்று உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
கண்டிப்பாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்தியனிடம் படத்தை பற்றி தான் கூறியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவித்து வருகிறது. மேலும் இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக வெற்றிதான் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான்கராத்தே திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…