தளபதி-65 படத்தில் சிவகார்த்திகேயன்.? பிரபலம் பகிர்ந்த ட்வீட்.!
தளபதி-65 படத்திலுள்ள ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுத உள்ளதாக நடிகரும்,நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.மேலும் இந்த படத்தின் ஹீரோயின், வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பது குறித்த பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளி வந்தது.ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.மேலும் யோகி பாபு தளபதி-65 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளியான புது தகவலின்படி,தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது அனிருத் இசையில் உருவாகும் பாடல் ஒன்றிற்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுத உள்ளதாக நடிகரும்,நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில், சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்து பாடிய டாக்டர் படத்திலுள்ள So baby பாடல் ஹிட்டாகி வருவதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பேனாவை எடுத்தாலே முதலில் பிளாக் பஸ்டர் என்று தான் எழுதுவீங்க போல ,அதன் பின் வரிகள் யோசிப்பீங்க என்று நினைக்கிறேன்.தளபதி 65 படத்திற்கான பாடல் அறிவிப்பிற்கு காத்திருப்பதாகவும் , நெல்சன், விஜய் சார், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதிலிருந்து தளபதி-65 படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து உறுதியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நெல்சனின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரது முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியதும் ,அது ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது.அதன் பின் நெல்சனின் இரண்டாவது படமான டாக்டர் படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும் ,அது மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
#SoBaby on loop . @Siva_Kartikeyan pennava edhuthaley first blockbuster nu dhan ezhuthuvinga polla . Apparam dhan lyrics I think 🙂 . @anirudhofficial pure magic @ananthkrrishnan gasa gasa ????????????????@Nelsondilpkumar waiting for T65 song announcement video. U, Ani ,sk and vijay sir ????
— Sathish krishnan (@dancersatz) February 26, 2021