அல்லு அர்ஜுன் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான அல் வைகுந்தபுரமுலு படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.காமெடியனாக களமிறங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கமர்ஷியல் படங்களில் கலக்கி வருகிறார்.
அந்த வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் ஆக்ஷன் படமாக வெளியாகி வசூலை குவித்த படம் அல் வைகுந்தபுரமுலு. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெயராம், முரளிஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். 100கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் 220 கோடி வரை வசூலை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை சிவகார்த்திகேயன் வாங்கியுள்ளதாகவும், அதனை தனது எஸ் கே புரொடக்ஷன் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் படமான இந்த படத்தில் மாஸ் ஹீரோவாக அல்லு அர்ஜுன் நடித்து கலக்கியிருப்பார். 5 சண்டை காட்சிகளை கொண்ட இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு செட்டாகுமா என்ற சந்தேகம் பலரிடமும் உண்டு. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…