நாளை ரிலீஸாகவுள்ள ஹீரோ படத்திலிருந்து அசத்தலான முக்கிய காட்சி வெளியானது!
- சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை ஹீரோ திரைப்படம் வெளியாக உள்ளது.
- இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. அதில், சூப்பர் ஹீரோ கதைக்களம் போல படம் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டது. இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதில், ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்சனுக்காக +2 மாணவர்களின் ரிசல்ட்டை சிவகார்த்திகேயன் மாற்றிவிடுகிறார். மேலும், அதற்கான சான்றிதழ்களை மாற்றும் முயற்சியில் இறங்குகிறார். இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.